JobVibe.lk - Sri Lanka Job Portal

தித்வா மூன்றாம் கட்ட நிதியுதவி.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட முழு மற்றும் பகுதியளவு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் மூன்றாம் கட்ட காசோலை புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு (01) திங்கட்கிழமை புத்தளம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


மேலும் இந்நிகழ்வில், புயலினால் வாழ்வாதார பாதிப்புக்குள்ளான வர்த்தகர்களுக்கான இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் எம்.எப்.ரின்சாத் அஹமட், புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி.விதானகே, புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், சீ.டீ.சி. தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال