Breaking News

உலக சுற்றுச்சூழல் தினம்: சவூதி அரேபியா சுற்றுச்சூழல் சுற்றுச் சூழலுக்கான அர்ப்பணிப்பு முதற் கொண்டு உலகளாவிய தலைமைத்துவம் வரை..!

எழுதியவர்: இலங்கைக் குடியரசிற்கான இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி மன்னரின் தூதர், காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி


சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்து வரும் உலகில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இனி ஒரு வளர்ச்சித் தேர்வாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த விஷயமாகவோ இல்லை. மாறாக, அது நாடுகளின் வெற்றியையும், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் அவற்றின் திறனையும் அளவிடும் ஒரு முக்கிய அளவுகோலாக மாறியுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டமானது, பூமிக் கோளின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வின் நிலைத்தன்மையையும் அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் வலுப்படுத்துகிறது.


சவூதி அரேபியாவில், இந்தப் பொறுப்பானது, இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பிரதமரான மாண்புமிகு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் ஆகியோரால் வழிநடத்தப்படும் ஒரு தொலைநோக்கு மூலோபாயப் பார்வையிலிருந்து உருவாகிறது. இவர்கள், 'விஷன் 2030'-இன் கீழ் சவூதி அரேபியாவின் தேசிய மாற்றத் திட்டத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கியுள்ளனர்.


உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை அடைவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையிலும், நிகழ்காலத் தேவைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளுக்கும் இடையிலும் ஒரு நிலையான சமநிலையை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது என்பதை சவூதி தலைமை அங்கீகரித்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதும் தேசத்தின் மற்றும் உலகின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீட்டைக் குறிக்கிறது என்றும், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகள் மற்றும் பரந்த சர்வதேச கூட்டாண்மைகள் தேவை என்றும் மாண்புமிகு பட்டத்து இளவரசரின் பார்வை உறுதிப்படுத்துகிறது.


இந்தப் பார்வையின் அடிப்படையில், மாண்புமிகு பட்டத்து இளவரசர் "பசுமை சவூதி அரேபியா" (SGI) மற்றும் "பசுமை மத்திய கிழக்கு" (MGI) ஆகிய முன்னெடுப்புகளைத் தொடங்கினார். இவை தேசிய மற்றும் பிராந்திய அளவிலான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஒரு தரமான பாய்ச்சலைக் குறிக்கின்றன. "பசுமை சவூதி அரேபியா" முன்னெடுப்பானது, உமிழ்வுகளைக் குறைத்தல், தூய்மையான தூய சக்தி வளத்தைச் சார்ந்திருப்பதை அதிகரித்தல், பல்லுயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல், சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவியது. "பசுமை மத்திய கிழக்கு" முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் புவியியல் எல்லைகள் இல்லை என்பதையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதையும் பற்றிய சவூதி அரேபியாவின் நம்பிக்கையை உள்ளடக்கியுள்ளது.


சவூதி அரேபியாவின் முயற்சிகள், முன்னெடுப்புகளைத் தொடங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், இப்பிராந்தியத்திலேயே மிகவும் மேம்பட்ட ஒன்றாகத் திகழும் ஒரு விரிவான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது வரையிலும் விரிவடைந்துள்ளன. சுற்றுச்சூழல் இணக்கக் கண்காணிப்பு, தாவர வளர்ச்சி மற்றும் பாலைவனமாதலைத் தடுத்தல், வனவிலங்கு மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற தேசிய மையங்கள், சுற்றுச்சூழல் நிதியத்துடன் சேர்த்து நிறுவப்பட்டன. இது, சவூதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பணிகள் துண்டு துண்டான திட்டங்களிலிருந்து ஆளுகை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த மூலோபாய அமைப்பாக மாறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், நிலையான வளர்ச்சியை அடைவதற்குப் புத்தாக்கமே திறவுகோல் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், சவூதி அரேபியா,  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், வட்ட கார்பன் பொருளாதாரம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களில் தனது முதலீடுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் சமச்சீரான தீர்வுகளை உருவாக்குவதில், சவூதி அரேபியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்குப் பங்களித்துள்ளது.


சர்வதேச அளவில், உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திட்டத்தை வடிவமைப்பதில் சவூதி அரேபியா ஒரு செல்வாக்குமிக்க பங்காளியாக உருவெடுத்துள்ளது. காலநிலை மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடுகளில் சவூதி அரேபியா தீவிரமாகப் பங்கேற்றுள்ளதுடன், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த சர்வதேச உரையாடலை வலுப்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்குவதில் சவூதி அரேபியாவின் சிந்தனைகள் வெற்றி பெற்றதற்கான ஒரு முன்மாதிரியாக, 2020-ல் சவூதி அரேபியா ஜி20 குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தபோது, அக்குழு வட்ட வடிவ கார்பன் பொருளாதாரக் கருத்தை ஏற்றுக்கொண்டது அமைந்தது.


இந்த முயற்சிகளின் உச்சகட்டமாக, பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 16-வது அமர்வை (COP16) சவூதி அரேபிய தலை நகரம் ரியாத் நடத்தியது. இது சர்வதேச சுற்றுச்சூழல் நடவடிக்கை அமைப்பில் சவூதி அரேபியாவின் முக்கிய நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். சீரழிந்த நிலங்களை மீட்டெடுத்தல், பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுதல், மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்துதல் போன்ற உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக, இந்த மாநாடு அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய தளத்தை வழங்கியது.


சுற்றுச்சூழல் துறையில் இன்றைய சவூதி அனுபவம், தெளிவான அரசியல் தொலைநோக்கு, செயல்திறன் மிக்க நிர்வாக உறுதி, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனப் பணிகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுக்கான திறந்த மனப்பான்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான முன்மாதிரியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல, மாறாக அதுவே அதன் அடிப்படை உந்துசக்தி என்பதையும், இயற்கையில் முதலீடு செய்வது என்பது மனிதகுலத்திலும் சமூகங்களின் எதிர்காலத்திலும் செய்யப்படும் முதலீடு என்பதையும் இந்த அனுபவம் உறுதிப்படுத்துகிறது.


இந்த உலகளாவிய தருணத்தில், சவூதி அரேபியா, தான் சாதித்தவற்றைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நம்பி, உலகெங்கிலும் உள்ள தனது பங்காளிகளுடன் இணைந்து முடியுமான அனைத்தையும் சாதிப்பதற்கு எதிர் பார்க்கிறது.









No comments