Breaking News

பவர் சென்டர்! ஹிஸ்புல்லாஹ் எம்.பி!

அரசியல் என்பது வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமல்லாது அது காய்களை நகர்த்தும் ஒரு சதுரங்க ஆட்டம் (Chess Game). இந்த ஆட்டத்தில் சில நேரங்களில் 'மந்திரி' (Bishop) அல்லது 'குதிரை' (Knight) கூட, 'ராஜாவுக்கு' (King) இணையான அதிகார பலத்தோடு போர்க்களத்தைத் தீர்மானிக்கும். இலங்கை அரசியல் சதுரங்கத்தில், அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணப் பலகையில், அத்தகையதொரு தவிர்க்க முடியாத 'பவர் சென்டர்' (Power Center) தான் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ். தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் அவர் அமர்ந்திருப்பது என்னவோ எதிர்க்கட்சி வரிசையில்தான். ஆனால், திரைக்குப் பின்னால் நகரும் நிழல் அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு ஒரு உண்மை புரியும் அரச தரப்பு, தனது சொந்தக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட, எதிர்க்கட்சியில் இருக்கும் ஹிஸ்புல்லாஹ்விற்கு அதிக செல்வாக்கையும், அதிகாரப் பின்னணியையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.


சொந்தக் கட்சிக்காரர்களைத் தற்காலிகமாகப் பகைத்துக் கொண்டாவது, ஹிஸ்புல்லாஹ் என்ற 'பவர் சென்டரை' தங்களுக்குச் சாதகமாக வைத்திருப்பதுதான் அதன் மறைமுக வியூகம்.


ஹிஸ்புல்லாஹ்வின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான முரண் அச்சமா? அல்லது அடுத்த நகர்வா?


சமீபகாலமாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹிஸ்புல்லாஹ், சாதாரண உள்ளூராட்சி மன்ற (Urban Council) உறுப்பினர்களுடன் நேரடியாக முரண்படுவதையும், அவர்களைப் பகைத்துக் கொள்வதையும் அரசியல் அரங்கில் காண முடிகிறது.


மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு எம்பியின் பலவீனம் போலவோ அல்லது அரசியல் அச்சம் போலவோ தோன்றலாம். ஆனால், சதுரங்கப் பலகையில் ஒரு 'யானை' (Rook), எதிரியின் சாதாரண 'சிப்பாய்களை' (Pawns) நோக்கி நகர்கிறது என்றால், அது பயத்தினால் அல்லாது சிப்பாய்களை வெட்டி வீழ்த்திவிட்டு, எதிரியின் கோட்டைக்குள் (King's side) ஊடுருவுவதற்கான ஒரு மாபெரும் காய் நகர்த்தல் (Tactical Move) ஆகும்.


சாதாரண உள்ளூராட்சி உறுப்பினர்களைக் காட்டி, பிராந்திய மட்டத்தில் ஒரு அரசியல் துருவமயமாக்கலை (Polarization) ஹிஸ்புல்லாஹ் உருவாக்குகிறார். 


1989 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நாடாளுமன்றம் நுழைந்தது முதல் இன்றுவரை, ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பயணம் எப்போதுமே 'அலைகளுக்கு எதிராக நீந்துவது' போன்றதுதான். மாகாண ஆளுநர் பதவி முதல் தேசிய அரசியல் வரை அவர் சந்தித்த சவால்கள் பல. ஆனால், வீழும்போதெல்லாம் இன்னும் பலமாக எழுந்திருப்பதுதான் அவரது வரலாறு.


கடந்த காலங்களில் ஆட்சிகளைத் தீர்மானிப்பதில் அல்லது மாகாணத்தின் அதிகாரக் கட்டமைப்பை மாற்றி அமைப்பதில் அவர் காட்டிய உத்திகள், அவர் ஒரு சாதாரண எம்பி அல்ல என்பதை நிரூபித்துள்ளன.

 

காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பின் அபிவிருத்திப் பின்னணியை கவசமாகக் கொண்டு, எதிரணியில் இருந்துகொண்டே ஆளும்கட்சியைத் தன் நிழலுக்குக் கீழ் கொண்டுவரும் வித்தை அவருக்கு அசாத்தியமானது.


சதுரங்க ஆட்டத்தில் ஒரு தேர்ந்த ஆட்டக்காரன் அடுத்த இரண்டு நகர்வுகளை மட்டும் யோசிக்க மாட்டான்.. ஆட்டத்தின் இறுதி (Endgame) எப்படி இருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பான். அவருடைய அதீத செல்வாக்கும், கீழ்மட்ட அரசியல்வாதிகளை அவர் கையாளும்கூடிய ஆக்ரோஷமான பாணியும், மிக விரைவில் கிழக்கு மண்ணில் அல்லது தேசிய அரசியலில் ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை (Political Earthquake) அவர் ஏற்படுத்தப் போகிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியே..


நிச்சயமாக, அவர் வெறும் காய் அல்ல; ஆட்டத்தைத் தீர்மானிக்கும் "பவர் சென்டர்!" தான்...





No comments