JobVibe.lk - Sri Lanka Job Portal

பள்ளிவாசல்துறை பாடசாலையில் இடம்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் ஏ.எம் றிஸ்கான் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் கற்பிட்டி கோட்ட கல்வி காரியாலயத்தின் உடற் கல்வி பாட ஆசிரியர் ஆலோசகர் எஸ்.ஐ.எம். பலீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார் அத்தோடு பாடசாலையின் உதவி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் 


இன்றைய மரக்கன்று நாளைய பசுமையான உலகத்தின் அடித்தளமாக அமையும் என்பதனை உணர்த்தும் வகையிலும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்க படுகின்றது என்ற முக்கியத்துவத்தை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال