JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வீடமைப்புகள் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பெரிய பள்ளி குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்பட்ட இரு வரிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் (06) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்நிகழ்வுகளில் புத்தளம் மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட், பிரதி மேயர் நுஸ்கி நிசார், பிரஜா சக்தி தலைவர் ஏ.ஏம்.ரியாஸ், அஷ்ஷெய்க் ஷாபி சஹ்தி, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளும் அக்கிராம சேவகர் பிரிவுகளின் கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال