JobVibe.lk - Sri Lanka Job Portal

மணல்தீவு சேகுவந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்தீவு சேகுவந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன், அமைப்பதற்கான பணிகள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் தலைமையில் (06) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்நிகழ்வில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும்  பிரஜா சக்தி தலைவருமான எம்.ஜிப்ரி, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும்  வீட்டு பயனாளிகளும், கிராம சேவகர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தரும் கலந்துக்கொண்டார்கள்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال