JobVibe.lk - Sri Lanka Job Portal

தழுவை கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தழுவை கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அலைகளுக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று சனிக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது.


புத்தளம் தில்லையடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களும் ஒரு இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை மாலை குடும்பத்தினருடன் தழுவை கடற்கரைக்கு சென்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் வீசிய பலத்த காற்றுடன் ஏற்பட்ட பாரிய அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.


பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்ட வேலை இவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் அடங்குவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர் 


உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال