JobVibe.lk - Sri Lanka Job Portal

ட்ரம்புக்கு ஏற்பட்ட அச்சம் அவரது அறிக்கைகளில் தெரிகிறது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான்மீதான மோதலை தீவிரப்படுத்தினால், தனது அணுசக்தி திறனை நிரூபிக்கும் வகையில் ஈரான் அணு ஆயுத சோதனையை மேகொள்ள உள்ளதான இரகசிய தகவல் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவுக்கு சென்றதன் காரணமாக ட்ரம்ப் கொஞ்சம் அடக்கி வாசிப்பதனை காணக்கூடியதாக உள்ளது. 


அதாவது ஈரானின் நாகரீகத்தையே அழிப்பதாக மிரட்டிய ட்ரம்ப், இன்று அவர் கூறுகின்ற வார்த்தைகள் ஆச்சர்யமாக உள்ளது.   


இறுதியாக வெளியான செய்திகளின்படி ஒப்பந்தம் தேவையில்லை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எப்போது வேண்டுமானாலும் எங்களால் கைப்பற்ற முடியும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.   


ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக இதுவரையில் அடிக்கடி கூறிவந்த நிலையில், ட்ரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.  


அத்துடன் ஈரானிய சுப்ரீம் லீடரை சந்திப்பதனை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 


ட்ரம்பின் அறிக்கைகள் மூலம் ஓர் அணு ஆயுத நாட்டின் பலம் என்ன என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது. 


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال