JobVibe.lk - Sri Lanka Job Portal

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயுக் கட்டண உயர்வுகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். 


இதன் ஒரு கட்டமாக, மக்களுக்கு 'சலுகை கொடு' என்ற பிரதான தொனிப்பொருளில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் சனிக்கிழமை (6) இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நீர்கொழும்பு போரதோட்ட கடற்கரை மைதானத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்கைகளில்  தீப்பந்தங்களை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பினர். 


ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் காவிந்த ஜயவர்தன தலைமையில் இந்தத் தீப்பந்தப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال