JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்த முன்னாள் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நகரின் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான விஷேட சந்திப்பு ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.கே அலாவுதீன் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவின் பங்குபற்றலுடன் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.


இதில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர்  ஜேசுதாஷன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள் அபிமாணிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் 


இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலை எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஒன்றிணைந்த எதிர் கட்சிகளின் கூட்டமைப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் வகிபாகம் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது  இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்வரும் 2026/06/11 ம் திகதி நடைபெற உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்பே கட்சியின் அரசியல் நிலைப்பாடு பற்றி தெளிவாக கூற முடியும் எனவும் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال