JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது அல்ஹிலாலில் 9 ஏ சித்தி பெற்ற மாணவன் பாராட்டி கௌரவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் அப்துல் சித்தீக் முஹம்மட் அஸாம் வெளியாகியுள்ள க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தெரிவித்தார்.

பாடசாலையில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, 9 ஏ சித்திபெற்ற மாணவன் உட்பட எப்.ஏ. அஸ்பாக் என்ற மாணவன் 8ஏ, பி சித்தி பெற்றும் மற்றும் உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்ற ஏனைய 23 மாணவர்களும் அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர், உதவி பகுதித் தலைவர் மற்றும்  கற்பித்த ஆசிரியர்களால் மாலை அணிவித்து, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (22) வித்தியாலயத்தின் காலை ஆராதனையின் போது பாடசாலையில் இடம்பெற்றது.

அந்த வகையில், 9 ஏ சித்தி பெற்ற ஏ.எஸ்.எம். அஸாம் மற்றும்  08 ஏ, பி சித்தி பெற்ற எப்.ஏ. அஸ்பாக் உட்பட எச்.ஜே.ஏ. ஜாமிட், எல்.எம். முஸர்ரப், எம்.எம். அல்ஜஹீ, எம்.ஏ. ஆபித், என்.எம்.ஹனான், ரீ.எம். தாபிஸ், ஜே.எம். மிஹாட், எச்.எம். அஹ்னாப், ஏ.ஆர்.எம்.ரஸ்லான், ஜே.எம். நிஜாத், ஏ.ஜே.எம். இபாத், எப்.எப்.ஏ.எப். உபை, எம்.ஐ.எம். லிஸ்னு லிஸான், எம்.ஜே.எம். ஆதிப் இஸ்மாயில், ஏ.எம். ஆஸிர், எம்.ஏ.எஸ்.எம். ஹாதிஸ், ஏ.டபிள்யூ. உமர் முஹம்மட், எம்.ஏ.எம். சுதைஸ், ஐ.எம். மில்ஹாஸ், ஏ.கே.எம். அப்துல்லாஹ், எம்.என். அப்துல் ரஹ்மான் ஆகிய  23 மாணவர்களும் இப்பாடசாலையில் இருந்து உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 9 ஏ பெற்ற மாணவனுக்கு இதன்போது அதிபரினால் 10,000 ரூபாய் பணம்  வழங்கி வைக்கப்பட்டது.

அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் மற்றும் பகுதித் தலைவர் ஏ.எல்.எம். இர்ஷாத், உதவி பகுதித் தலைவர் அலிரஜாய் மற்றும் இந்த சாதனையை நிலை நாட்ட மேலதிக வகுப்புக்கள் நடைபெறுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ. சர்ஜுன் மற்றும் பாடசாலையின் விளையாட்டு துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எம். நுஸ்கி மற்றும் பாடசாலை இடைநிலை கல்விக்குப் பொறுப்பான பிரதியதிபர் ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பிரதியதிபர் எம்.எச். லாபிர் ஆகியோரின் அயராத முயற்சியாலும் கற்பித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவும் 09 ஏ சித்தி உட்பட ஏனைய உயர்தரம் கற்பதற்குத் தகுதியான பெறுபேற்றையும் இப்பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக  இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்  யூ.எல். நஸார் மற்றும் முன்னாள் அதிபரும் தற்போதைய சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலய அதிபருமான எம். எச். நுஸ்ரத் பேகம் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் இதன்போது தமது விசேட நன்றியையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களோடு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال