JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கண்டக்குளியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், கிருமிநாசினி மற்றும் விதைகளை கைப்பற்றிய பொலிஸ் விஷேட அதிரடிப்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பெரும் அளவிலான கிருமிநாசினிகள், விதைகள் மற்றும் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கற்பிட்டி - கண்டக்குளி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 


கண்டக்குளி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கிருமிநாசினிகள், விதைகள் மற்றும் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال