JobVibe.lk - Sri Lanka Job Portal

10 வருட கால தாகம் தணிந்தது. புத்தளம் புபுது பாலர் பாடசாலைக்கு குடிநீர் வசதி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், ரத்மல்யாய புபுது பாலர் பாடசாலையில் கடந்த சுமார் 10 வருட காலமாக நிலவி வந்த பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஒரு நிறைவான தீர்வை எட்டியுள்ளது.


புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸின் சுமார் 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  எதிர்கால சந்ததியினரான மழலைச் செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த குடிநீர் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.


புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸின் நேரடி வழிகாட்டலிலும், பிரஜா சக்தி 

 உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிலும் இந்த குடிநீர் விநியோக திட்டம் தங்கட்கிழமை (11) காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு ஆசிரியைகள் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.


சுமார் ஒரு தசாப்த காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாணவர்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்ய உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸுக்கும், இதற்காக உழைத்த பிரஜா சக்தி அமைப்பின் அங்கத்தவர்களுக்கும், மற்றும் தொண்டு பணியாற்றும் சகோதரிகளான ஆயிஷா, சனுஸியா ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال