JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஹ்யாஉல் உலூம் அரபுக் கல்லூரியில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் இஹ்யாஉல் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திங்கட்கிழமை (04) கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் சனூஸ் (ரஹ்மானி) தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ், பிரதேச சபை உறுப்பினர் நில்பான், அஷ்ரபிய்யா மத்ரஸா அதிபர் அஷ்ஷெய்க் இமாம்தீன் அஷ்ரபி, இஹ்யாவுல் உலூம் மத்ரஸாவின் நிர்வாக செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, பொருளாளர் வைத்தியர் அஸ்லம் நூரி, உப பொருளாளர் அஷ்ஷெய்க் சகீனத்கான்,  உறுப்பினர் ரிழ்வான், உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கட்டிடத்தை அல்-ஹாஜ் றிஸ்வான் தமது தாய் தந்தையார்களின் பெயரில் (Aboo Salif, Zainul Arab) முழுமையாக கட்டித் தர முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال