JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட வருகை தருபவர்களுக்காக வைத்தியசாலை நிர்வாகம் விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


அந்த அறிவிப்பில், வைத்தியசாலையில் நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகள் அமுலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


அதில்,


ஒரு நோயாளிக்கு ஒரே நேரத்தில் 2 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர்.


• தொற்று நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வருகை தருவதை தவிர்ந்து கொள்ளவும். 


• நோயாளியைப் பார்வையிடுவதற்கு 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.


• வைத்தியசாலை வளாகத்தில் அமைதியைப் பேணவும்.


• நோயாளிகளின் ஓய்வை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கவும்.


• மருத்துவர்கள் வழங்கும் வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயமாகக் கடைபிடிக்கவும். 


இந்நடவடிக்கைகள் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال