JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு நேற்று இரவு சவூதி அரேபியா பயணம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு நேற்று 01 ஆம் திகதி இரவு 09.05 மணிக்கு விசேட சவூதி ஏயார் லைன்ஸ்  விமானம் மூலம் ஜித்தா  பயணமாகினர்.


இந்த முதலாவது ஹஜ் குழுவில் 07 ஹஜ் முகவர்கள் மூலமாக 325 பேர் பயணமாகினர்.


இவர்களை வழியனுப்பும் நிகழ்வு நேற்று 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் - கஹ்தானி, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹ்லார், விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எச்.எம். அம்ஜடீன், மற்றும் அதன் உறுப்பினர் றுஸ்தி காலித், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளான கே. சப்றி மற்றும் அஷ்ஷெய்க் முப்தி முர்ஷி, ஹஜ் முகவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இலங்கையிலிருந்து இவ்வாண்டு 3,500 யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال