JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸாவில் இடம்பெற்ற முன்மாதியான முஸ்லிம் மாணவர்கள் எனும் கருப்பொருளில் செயலமர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிராந்திய ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்று முன்மாதிரியான முஸ்லிம் மாணவர்கள் எனும் கருப்பொருளில் வெள்ளிக்கிழமை (08) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் யூ.எம்.எம் அமீர் (SLPS- 1) தலைமையில் இடம்பெற்றது 


இதன்போது அதிபர் தனதுரையில் இவ்வாறான முன்மாதிரியான முஸ்லிம் மாணவர்களின் உருவாக்கத்தில் இன்றைய இச் செயலமர்வு ஆரம்ப கட்டத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் சிறந்த ஒரு மாணவர் சமூகத்தை உருக்கும் என்ற நம்பிக்கை தனக்குண்டு எனவும் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்த கற்பிட்டி பிராந்திய ஜம்மியத்துல் உலமாவின் நிர்வாகக் குழுவினருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் 09, 10 மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான இச் செயலமர்வின் விரிவுரையாளர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரச்சாரக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.றமழான் மர்ஸூக், மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்ஷெய்க் கே.எம் முக்ஸித் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கற்பிட்டி பிராந்திய ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் முபாஸில் (உஸ்மானி)செயலாளர் அஷ்ஷெய்க் மிக்தாத் (றஹ்மானி) ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப்.சாஜீனாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال