JobVibe.lk - Sri Lanka Job Portal

பாலஸ்தீன் நாட்டின் இலங்கை பிரதிநிதியாக எம். எப். முஹம்மது பௌஸர் கடமையேற்பு...!.

பாலஸ்தீன அரசிற்கான இலங்கையின் நியமனப் பிரதிநிதி எம். எப். முகம்மது பௌஸர், ரமல்லாவில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (06) அன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.


பதவியேற்புக்குப் பின்னர் ஊழியர்களிடையே உரையாற்றிய பௌஸர், இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


மேலும், பாலஸ்தீனத்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


பாலஸ்தீனத்தில் சமீபத்தில் நிலவிய சவாலான காலகட்டத்தில் அலுவலக ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு ஃபவ்ஸர் பாராட்டு தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال