JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மேதானந்தா வித்தியாலய புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கோட்ட கல்விப் பிரிவில் அமைந்துள்ள புத்தளம் மேதானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட 80 அடி × 25 அடி அளவிலான ஒற்றை மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (04) அண்மையில் இடம்பெற்றது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.


மாணவர்களின் கல்விக்கு  முன்னுரிமை அளிக்கும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இத்திட்டத்திற்காக சுமார் 11.05 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டுள்ளது.


இந்நிகழ்வில் சமய தலைவர்கள்,  அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ செல்வங்கள், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال