(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை தரம் ஒன்று மாணவர்களுக்கான ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடலும் எனும் தலைப்பில் அமைந்த சுதேச உணவு தயாரிப்பு மற்றும் கண்காட்சி நிகழ்வு வியாழக்கிழமை (07) பாடசாலையின் வளாகத்தில் அதிபர் எம் எம் எம் நௌப் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உறுப்பினர்கள், தரம் ஒன்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இதில் பெற்றோர்கள் தயாரிக்கப்பட்ட பாராம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டதுடன் அதன் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய தெளிவுகளும் அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



