JobVibe.lk - Sri Lanka Job Portal

"SAPP" தேசிய இளைஞர் விவசாய - முயற்சிக் கண்காட்சி மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான தொடர்பாடல் மாநாட்டில் பிரதமர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் 'சிறு அளவிலான விவசாய முயற்சிப் பங்காளித்துவத் திட்டத்தின்' (SAPP) ஊடாக, கிராமப்புற இளைஞர், யுவதிகளை விவசாய முயற்சிகளில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இடம் பெற்ற "SAPP" தேசிய இளைஞர் விவசாய - முயற்சிக் கண்காட்சி மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான (B2B) தொடர்பாடல் மாநாட்டு வியாழக்கிழமை (28) பத்தரமுல்லை 'வொட்டர்ஸ் எட்ஜ்' ஹோட்டலில் நடைபெற்றது  இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 


"விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகும். ஆயினும், காலநிலை மாற்றங்கள் மற்றும் சுற்றாடல் நிலைமைகளை முன்கூட்டியே எதிர்வு கூறுவது கடினமாகும்போது விவசாயத் துறை பாரிய சவால்களுக்கு உள்ளாகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாய முயற்சியாளர்களாகிய உங்களது பங்களிப்பு என்பது வெறும் பணம் சம்பாதித்தல் மாத்திரமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஊடாகத் தேசியப் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் பாரிய பங்களிப்பாகும்" என தெரிவித்தார்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال