JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) பிரதேச செயலாளர் பிரியதர்ஷினியின் வழிகாட்டலின் கீழ், கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஜே எம் பைசல் தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது 


இதில் பாராளுமன்ற உறுப்பினர் என் டி எம் தாஹீர், கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய பல அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவப் படுத்தும் வண்ணம் அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


 பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான  முக்கிய விடயங்கள் குறித்து  கலந்துரையாடப்பட்டதுடன் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாகவும் கருத்து பரிமாற்றல்கள் இடம்பெற்றதுடன்  மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள  பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال