JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொழும்பு முகத்திடல் நவீனமயமாக்கல் மற்றும் புணரமைப்பின் முதற்கட்டம் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொழும்பு முகத்திடலை நவீனமயப்படுத்தல் மற்றும் புணரமைப்பு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கான கள விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை புத்தளம் மாநகரசபையின் முதல்வர் ரின்ஷாட் அஹமடின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளுக்கமைய  ஆரம்பிப்பதற்கான கள விஜயமொன்று மேற்கொளாளப்பட்டது.


புத்தளம் நகரை நோக்கி வருகைதரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளை கவரும் வண்ணம் நவீனத்துவத்துடன் புணரமைப்பு செய்வதுடன் பொருத்தமான சகல வசதிகளையும் உருவாக்குதலின் அடிப்படையில் இக் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. 


இக் களவிஜயத்தில் புத்தளம் மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஓ. அலிகான், இப்லால் அமீன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் 


இலங்கை சுற்றுலாத்துரையின் கேந்திரமாக புத்தளம் நகரையும் மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பை பெறுவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் புத்தளத்தில் உள்ள கொழும்பு முகத்திடல் மற்றும் களப்பு பகுதிகளின் நவீன அபிவிருத்தி பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال