Breaking News

சூழ்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், பணிந்தது அமெரிக்கா. ஆனாலும் நம்ப முடியாது.

ஈரான், வலிந்து சென்று போர் தொடுக்கவில்லை, எந்தவொரு நாட்டையும் அச்சுருத்தவுமில்லை, ஆக்கிரமிக்கவுமில்லை, பிற நாடுகளின் வளங்களை கொள்ளையடிக்கவுமில்லை. அதன் இறையாண்மையை பேணி வந்தது. ஆனால் இவைகள் அனைத்தையும் செய்தது அமெரிக்காவும், இஸ்ரேலும். 


நடைபெற்ற போரில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு ஈரானுக்கு எதிரான தங்களது அனைத்து சதித் திட்டங்களையும் அரங்கேற்றியது. இறுதியில் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில்தான் வரலாற்றை அழிக்கப்போவதாக அச்சுறுத்தியது. 


ட்ரம்பின் அச்சுருத்தலினால் உலகமே பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பின்கதவால் சென்று ஈரானிடம் சரணடைந்தது அமெரிக்கா.        


அதாவது ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொன்டதனால் இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு ஈரான் இணங்கியுள்ளது. 


அதில் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு, பொருளாதாரத் தடைகளை நீக்குதல், யுரேனிய செறிவை வைத்திருக்க முடியும் போன்ற பிரதான கோரிக்கைகளுக்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.  


ஈரானின் 10 அம்சத் திட்டத்தை இவ்வளவு காலமும் நிராகரித்த அமெரிக்கா, தற்போது அதனை ஏற்புடையதாக கருதுகிறது. அடுத்து வரும் நாட்களில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகின்றது. 


இதனையடுத்து  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.


இதேவேளை, அமெரிக்காவுடனான மோதலில் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானிய மக்கள் கொண்டாடுகின்றனர். 


இருந்தாலும் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நம்ப முடியாது. போர்நிறுத்த காலத்தை பயன்படுத்தி போர் கப்பல்களை ஈரானை நோக்கி நகர்த்துவதனை கண்காணிக்க வேண்டியது ஈரானின் பொறுப்பாகும். 


முகம்மத் இக்பால்


படம் AI




No comments