JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஊடகப் பிரிவின் ஆலோசகராக அன்ஸார் மௌலானா நியமனம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனை ஜம்மியதுல் உலமாவின் தலைவரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நழீமி) அவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஊடகப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ் மொழி சார்ந்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வினைத்திறன் மிக்க தொடர்பாடல்களை மேற்கொள்ளவும் முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளுடன் சிறந்த ஊடக உறவைக் கட்டியெழுப்பவும் இவரது நியமனம் பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மருதமுனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களின் இரண்டாவது புதல்வரான இவர் சமகால தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் நட்புறவைப் பேணி வருகின்ற ஒரு கல்வியியலாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


மேலும், பிராந்திய மட்டத்திலும் தேசிய ரீதியிலும் இயங்கி வருகின்ற பல்வேறு சிவில் சமூக அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அன்ஸார் மௌலானா அவர்கள் அவற்றின் வளர்ச்சிக்காகவும் அவற்றால் முன்னெடுக்கப்படுகின்ற கல்வி, கலாசார, சமய, சமூக நலன் சார்ந்த வேலைத் திட்டங்களிலும் முக்கிய பங்காற்றி வருகின்ற ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال