Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் விழிப்பூட்டல் கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இடையில் மத்திய கிழக்கு போர் நிலைமையினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் அதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு கலந்துரையாடல் கற்பிட்டியில் இடம்பெற்றது.


​தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டியின் தொகுதி அமைப்பாளரும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான சஞ்சீவ பெர்னாண்டோ தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் மற்றும் பெரிய குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிரஜா சக்தி குழுக்களின் தலைவர்கள் நிஹால் மற்றும் புதுக்குடியிருப்பு பிரஜா சக்தி தலைவர் மஜீத் கான் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (07) கற்பிட்டிறில் இடம்பெற்றது 


அரசின் கிராம அபிவிருத்தியை மையப்படுத்திய பிரஜா சக்தி குழுவின் அதிகாரம் தொடர்பாகவும் அவர்களின் பொறுப்புக்கள் பிரஜா சக்தி குழுவினால் முன்னெடுக்கப்படகு கூடிய வேலைத்திட்டங்கள் என்பன பற்றிய தெளிவூட்டல்கள் மற்றும் நாடு தற்போது எதிர் நோக்கியுள்ள நெருக்கடி நிலை என்பன பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி தொகுதி அமைப்பாளர்  சன்ஜீவ பெர்னான்டோ கருத்து தெரிவித்த மையும் குறிப்பிடத்தக்கது.






No comments