JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் பிரதி மேயர் அஷார்தீன் மொய்னுதீனின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட முத்திரை வெளியீடு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்தீன் மொய்னுதீன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் முத்திரை ஒன்று வியாழக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


​மாநகர சபை உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நிகழ்வு, மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பிரதி மேயர் அவர்களின் மக்கள் சேவையைப் பாராட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நினைவுத் தபால் முத்திரை மாநகரசபை உறுப்பினர்களினால் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.


​இந்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பிரதி மேயருக்குத் தமது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


​குருநாகல் மாநகரப் பகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார் பணிகளில் பிரதி மேயர் அஷார்தீன் மொய்னுதீன் ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டியே இந்த விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டதாக உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال