JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹொரொவ்பொத்தான இம்தியாஸ் எழுதிய "உலகை ஜெயித்தவர்கள்" நூல்வெளியீடு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஹொரொவ்பொத்தான அஹமட் இம்தியாஸ் எழுதிய "உலகை ஜெயித்தவர்கள்" நூல்வெளியீடு கடந்த திங்கட்கிழமை (13) ஹொரொவ்பொத்தான பிரதேச சபை விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


சவால்களை சளைக்கச்செய்து சாதித்தவர்கள் பற்றிய உண்மைக்கதைகள் பல அடங்கிய வண்ணம் வெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா ஹொரொவ்பொத்தான அ/ பதியுத்தீன் மஹ்மூத் மகா வித்தியாலய(தேசிய பாடசாலை)யின் அதிபர்  ஆர். இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்றது.


பிரதம அதிதியாக கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் திரு.ஆர்.செந்தில் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக புத்தளம் மாநகர ஆணையாளர் திரு.ஜே.ரழியுத்தீன் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக நீதிமன்ற பதிவாளர் திரு.எம்.ரினோஸ்  ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்தின் நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் முன்னாள் நீதிமன்ற பதிவாளரும் திருகொணமலை தமிழ்ச்சங்க ஆலோசகருமான திரு. எஸ். எம் . நஸீர்,கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், ஹனா அன்வர் சதாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்


மேலும் பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் நயவுரை கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் நிகழ்த்தினார். நூலின் முதற்பிநதியை ஹொரொவ்பொத்தான பீ.எஸ்.பாமசி உரிமையாளர் திரு சதாத் சலீம் பெற்றுக் கொண்டார்.


இது நூலாசிரியரின் நான்காவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال