JobVibe.lk - Sri Lanka Job Portal

நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு. புத்தளம் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுக்கின்ற விஷேட அறிவித்தல்.

எம்.யூ.எம்.சனூன்

தற்போது நாட்டில் நிலவி வருகின்ற மின்சார தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்கின்ற வகையிலே அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுடைய வழிகாட்டலின் கீழ் "சுபீட்சமான இலங்கை" எனும் தேசிய வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், வரையறைகளை கடை பிடிக்குமாறும் ஜனாதிபதி செயலகத்தினால் கொடுக்கப்பட்ட வழிகாட்டலுக்கு இணங்க புத்தளம் மாநகர சபை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கின்ற அறிவுறுத்தல்களை  நடைமுறைப்படுத்துமாறு புத்தளம்  மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீதி விளக்குகள் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற கால வரையான மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரை காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மேலும் இக்கால வேளையில் பொதுமக்களும் தமது வீடுகளில் தொலைக்காட்சி பார்த்தல், குளிர்சாதன பெட்டி, ஏ சி பாவித்தல், சலவை இயந்திரம், மின் அழுத்தி, அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட இன்னோரென்ன மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை முடியுமான அளவு தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இதே போன்று வியாபார நிலையங்களிலும் மின்சார பாவனைகளை முடியுமான வரை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


எனவே நாட்டின் மின்சார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டு இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு பொதுமக்களும் தமது பூரண பங்களிப்பை வழங்குமாறு புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் வேண்டிக்கொள்கின்றார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال