JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தேத்தாவாடி மீனவ கிராமத்தின் பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினையை தீர்த்து வைத்த தவிசாளர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தேத்தாவாடி மீனவர்களின் பாதையை ஆக்கிரமித்த சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரை எச்சரித்ததுடன் மீனவர்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்க கூடாது என்ற கட்டளையும் பிறப்பித்தார்.


கற்பிட்டி தேத்தாவாடி மீனவ கிராமத்திற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஏ ஆர் எம் முஸம்மின் வேண்டுகோளை  அடுத்து  கள விஜயம் செய்த கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ் தேத்தாவாடி மீனவர்கள் பல தசாப்தங்களாக பாவித்த பாதைக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அப்பாதை பொதுமக்கள் பாவனைக்காகவே விடப்பட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட சுற்றுலா விடுதி பொறுப்பதிகாரிக்கு அப்பாதைக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற உறுதியான கட்டளை பிறப்பித்தார்


பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் அப்பாதையில் போக்குவரத்து செய்வதற்கு யாரும் தடை போட முடியாது என்பதையும் பொதுமக்கள் மத்தியில் தெளிவு படுத்தினார்


அத்தோடு கற்பிட்டி நாரா  நிறுவனத்தோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடலிலிருந்து 10 மீற்றர் வரையான சட்ட ரீதியான கடல் எல்லையை அளந்து அப்பகுதியில் எல்லைக் கூஞ்சியை நாட்டுமாறும் கோரிக்கை விடுத்தார்.


இதில் கற்பிட்டி பிரதேச சபையின் பிரதி  தவிசாளர் சமன் குமாரவும் கலந்து கொண்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال