JobVibe.lk - Sri Lanka Job Portal

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு கௌரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக சேவையாற்றிவரும் உயரிய பங்களிப்புகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இன்று (14) கௌரவம் வழங்கப்பட்டது.


மக்களுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு, உறுதியான பணிப்பற்று, சமூக நலனுக்கான அயராத முயற்சிகள் மற்றும் இன, மத பேதமற்ற சேவைகள் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.


இக்கௌரவத்தினை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் "தேசிய ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய, சமூக ஜோதி, சாதனைத் தமிழன்" உ. உதயகாந்த், மையத்தின் உப தலைவர் "சமூக ஜோதி, தேசகீர்த்தி, தேசிய ஜோதி" எம். வை.ஆதம் மற்றும் ஊடகவியலாளர் எம்.சாஜீத் ஆகியோர் வழங்கினர்.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் இ. எம். றுஸ்வின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


-- ஊடகப்பிரிவு





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال