JobVibe.lk - Sri Lanka Job Portal

புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன் 

தித்வா புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட  மூன்று குடும்பத்திற்கான புதிய வீடுகளை  நிர்மாணிக்கும் பணிகள் முள்ளிபுரம்  கிராம சேவகர் பிரிவில் (27)சமகாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


புத்தளம் அல் அமீன் புரம், குபா மற்றும் இல்யாஸ் தோட்டம் ஆகிய கிராமங்களிலேயே இந்த புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


தித்வா புயல் காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கான முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வுகள் புத்தளம் பிரதேச செயலாளர் பிரதான மண்டபத்தில் நடந்தேறி இருந்தன.


இதில் காசோலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளுக்கான வீடுகள் அமைக்கும் திட்டங்களே தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.


அடிக்கல் நாட்டும் இந்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம் பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் ரின்சாட் அஹமத், புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி.விதானகே மற்றும் புத்தளம் பிரதேச உதவி செயலாளர் விஜயசூரிய, புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர்களான இப்லால் அமீன், சஹ்ரான் தாஜுதீன், முள்ளிபுரத்தின் சமூக மேம்பாட்டு சபை தலைவர் முஹம்மது ரிபாஸ் மற்றும், புத்தளம் கிழக்கு மன்ற தலைவர் சர்ராஜ் லாபிர், தேசிய மக்கள்  சக்தியின் உறுப்பினர்கள்,  கிராம சேவகர், கிராம அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், கிராமவாசிகள் மேலும் புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال