Breaking News

புளிச்சாக்குளம் உமர் பாரூக் பாடசாலை கரப்பந்தாட்டத்தில் கோட்ட மட்டத்தில் சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டின் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் 16 வயதிற்குட்பட்ட பிரிவு மற்றும் 18 வயதிற்குட்பட்ட பிரிவு ஆகிய இரண்டிலும் முதலாம் இடங்களையும் 20 வயதிற்குட்பட்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.


விளையாட்டுக்கான  போதுமான வளங்கள் இன்றி கோட்ட மட்டத்தில் சாதனை படைத்து  வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதிபர் எம் யூ எம் சாஜஹான் தமது மாணவர்கள் வலயம் மற்றும் மாகாண மட்டங்களில் சாதித்து தேசிய மட்டத்திலும் சாதனை புரிய வேண்டும் எனவும் பிரார்த்திப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.







No comments