JobVibe.lk - Sri Lanka Job Portal

மனிதநேயத்தின் அழகிய எடுத்துக்காட்டு.

எம்.யூ.எம்.சனூன், எம். எச். எம். சியாஜ்

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் கடினமான காலகட்டத்தில், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக, புத்தளம் நகர கிளை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இரண்டு கோடி ரூபா மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்த நிவாரணங்கள் புத்தளம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகப் பகிர்ந்து வழங்கப்பட்டன.


அந்த அவசர நிலையில் மக்களுடன் நின்று ஆதரவளித்ததற்காக நன்றியைத் தெரிவிக்கும் நோக்கில், புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் மருதமுனைக்கு நேரில் சென்று சந்தித்தனர்.


இந்த சந்திப்பின் போது புதிய காரியாலய கட்டமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.


மனிதநேய சேவைக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டு நன்றிக்கடிதமும் வழங்கப்பட்டது. மேலும், எதிர்கால இணைப்பு திட்டங்களும் வகுக்கப்பட்டன.


அதோடு, பொதுச் சம்மேளனம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال