JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஆலங்குடா தாய் சேய் நல நிலையத்தின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட தவிசாளர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தின் ஆலங்குடா பகுதியில் உள்ள தாய்-சேய் நல நிலையத்தில் நிலவும் அடிப்படை குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு ஆலங்குடா பிரஜா சக்தி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் வியாழக்கிழமை (02) நேரடி களப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.


இதன் போது மேற்படி தாய் சேய் நல​நிலையத்தின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து கொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார் 


ஆலங்குடா கிராமத்தின் சுகாதாரத் தேவைகளை உணர்ந்தும் பிரஜா சக்தியின் கோரிக்கையை ஏற்றும் உடனடியாகச் செயற்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளருக்கு ஆலங்குடா பிரஜா சக்தி சார்பாக மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال