JobVibe.lk - Sri Lanka Job Portal

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.


செவ்வாய்க்கிழமை (14) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர்.


காணாமல் போன இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.


காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال