சட்டவிரோதமாக ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டி கீரிமுந்தல் பகுதியில் கடற்படையினரால் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி கீரிமுந்தல் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் செவ்வாய்க்கிழமை (31) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கற்பிட்டி கீரிமுந்தலா கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த டிங்கி படகு (01) மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின்போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு, ஏலக்காய் இருப்பு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.


No comments