JobVibe.lk - Sri Lanka Job Portal

சிலாபத்தில் இணையவழி திதி மோசடியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 09 வரை விளக்கமறியல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இணையவழி நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறித்த சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


சிலாபம், இரணவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 133 சீனப் பிரஜைகளும், 13 வியட்நாம் பிரஜைகளும், ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال