JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நூர் நகரை பாதுகாக்க மாநகர சபையில் பிரேரணை

தூய தேசத்தத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களினால் வருகின்ற 7ம் திகதி நடைப்பெற இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான மாநகர சபை பொதுக்கூட்டத்தில் புத்தளம் நூர் நகர் சம்பந்தமான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


மர்ஹூம் டாகடர் இலியாஸ் அவர்களினால் சட்டபூர்வமாக நிருவப்பட்ட புத்தளம் நூர் நகர் புகையிரத நிலையத்தில் ஒரு சில மாதங்களாக எந்த வித சேவைகளும் நடைபெறாமல்  இருக்கிறது. ஆனாலும் அந்த புகையிரத பாதையின் வழியாக சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணக்கற்கள் தொடராக ஒவ்வொரு நாளும் கொண்டுசெல்லப்படுகிறது. இது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்பதால், மக்கள் சேவையை அவசரமாக ஆரம்பிக்க கோரி புத்தளம் மாநகரசபையின் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்த முயற்சி தூய தேசத்திற்கான கட்சியின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது.


இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ரயில் பொது சேவை நிலையத்தை அவசரமாக இயங்கு நிலைக்கு கொண்டுவந்து ரயில் நிலையத்தை பாதுகாப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال