Breaking News

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா ? யார் பயங்கரவாதிகள் ? RSS சங்கிகளின் பிரச்சாரமும், மறைக்கப்பட்ட உண்மைகளும்.

முஸ்லிம்கள் என்றால் அவர்கள் பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.   


இனவாதிகளுக்கு எதனைக் கூறினாலும் அவர்கள் உண்மையை ஏற்கப்போவதில்லை. ஆனால் முஸ்லிம் நாடுகளில் ஏன் ஆயுத இயக்கங்கள் உருவானதென்ற உண்மையை புரியக்கூடியவர்களுக்காக சுருக்கமாக விளக்குவதுதான் இந்த கட்டுரையாகும். 


ஆக்கிரமிப்புக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் நடத்துகின்ற உன்னத வீரர்களை பயங்கரவாதிகள் என்று கூறுபவர்கள் நிச்சயமாக அவர்கள் மன நோயாளிகள்.   


1948 இல் பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்னும் தேசம் சட்டவிரோதமாக உருவாக்கும் வரைக்கும் அங்கு பாலஸ்தீன் விடுதலை இயக்கங்கள் இருக்கவில்லை.  


தெற்கு லெபனானை இஸ்ரேலிய படைகள் 1982 இல் கைப்பற்றியதன் பின்புதான் அங்கு “”ஹிஸ்புல்லாஹ்”” அமைப்பு உருவானது.   


சோவியத் யூனியன் படைகள் 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பின்பு அவர்களை வெளியேற்றுவதற்காக ஒசாமா பின் லேடன் தலைமையிலான “”முஜாஹிதீன்கள்”” என்ற பெயரில் சொவியத் படைகளுக்கு எதிராக போராடினார்கள். இதற்கான முழு அனுசரணைகளும் அமெரிக்கா வழங்கியது. இவர்கள்தான் பின்னாட்களில் அல்-கொய்தாவாக மாறினார்கள்.  


2003 இல் அமெரிக்க படைகள் ஈராக் மண்ணை ஆக்கிரமித்த பின்புதான் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடுவதற்காக ஈராக்கில் பல இயக்கங்கள் உருவானது. 


2011 இல் சிரியாவை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், சிரியாவை பாதுகாப்பதற்கு பல இயக்கங்கள் உருவானது. 


அத்துடன் “குர்திஸ்” இன மக்களுக்கு தனியான நாட்டை உருவாக்கி தருவதாக வாக்குறுதி வழங்கி அம்மக்களுக்கு ஆயுதங்களும், பணமும் வழங்கி தனது தேவைக்காக அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது. 


அமெரிக்காவின் முயற்சியினால் லிபியாவில் கடாபியின் ஆட்சியை வீழ்த்திய பின்புதான் அங்கு பல இயக்கங்கள் உருவானது. 


அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பல இயக்கங்கள் உருவானாலும், இன்னும் சில இயக்கங்கள் இஸ்லாமியர்கள் என்பதற்கப்பால் இனம், மொழி, பிரதேசம் என்ற பிரிவினையின் அடிப்படையில் அமெரிக்காவின் அனுசரணையில் உருவாக்கப்பட்டது. 


பல ஆயிரம் கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள அமெரிக்கா, முஸ்லிம் நாடுகளில் தளம் அமைக்காமலும், அங்குள்ள வளங்களை சுரண்டாமலும் இருந்திருந்தால், இன்று உள்ளது போன்று எந்தவொரு ஆயுத இயக்கங்களும் தோன்றியிருக்காது. முஸ்லிம் நாடுகளில் அமைதி நிலவியிருக்கும். 


எனவே ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிடுகின்றவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஆக்கிரமிப்பாளர்களே பயங்கரவாதிகள். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments