காலியில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
“நீதி மற்றும் நிலையான தீர்வுகளுக்காக மலையகப் பெண்களின் குரலை உயர்த்துவோம் ” என்ற தலைப்பின் கீழ், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் (VOPP) அமைப்பானது தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மலையகத் தமிழ்ப்பெண்கள் மற்றும் ஏனைய பெண்களையும் இணைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (13) காலி செட்கோல் நிறுவன மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழாவை மிக சிறப்பாக நடாத்தியது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென் மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் சுசிரிபால மானவடுவ அவர்கள் கலந்து கொண்டதுடன், காலி மாவட்ட செயலாளர் (மாவட்ட அரசாங்க அதிபர் ) கே. யூ. சந்திரலால், ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், பாலிந்தநுவர (களுத்துறை) பிரதேச சபை உறுப்பினர் பி. கவுதமி, தென் மாகாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ரேமன் விக்ரமசிங்கம் ஆண்டகை, ஓய்வு பெற்ற அதிபரும் அறிஞருமான பூஜ்ய நாகியாதெனிய ஞானோத்ர தேரர், ஸ்ரீ விக்னேஷ் ஷர்மா குருக்கள், காலி ஜும்மா பள்ளிவாசலின் அஜ்மால் நல்மி மௌலவி, அருட்சகோதரி தீபா பிரணாண்டோ, தென் மாகாண கத்தோலிக்க சபையின் குருமுதல்வர் மற்றும் செட்கோல் நிறுவனத்தின் இயக்குநர் பிதா மைக்கேல் ராஜேந்திரன், ஆண்டகையின் செயலாளர் அருட்பணி நிமேஷ் அடிகளார் , காலி மறைமாவட்டத்தின் பேராலய பங்குத்தந்தை அருட்பணி டேமியன் அர்ஸகுலரத்ன, அருட்சகோதரி ஷிரோமி, அருட்சகோதரி கிரிஷாந்தி ஆகியோர் உட்பட, காலி பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி, அரச அதிகாரிகள், மலையகப் பாடசாலை அதிபர்கள் , கொழும்பு, நுவரெலியா, நீர்கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், VOPP அமைப்பின் இயக்குநர் சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மேலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த மலையகப் பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மலையகப் பெண்கள் மேடை கலந்துரையாடல்கள் மற்றும் நாடகங்களின் மூலம் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்தனர்.
மேலும், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஆளுநர் மற்றும் காலி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களுக்கும் வழங்கினர். இந்த முயற்சி பெண்களின் குரலை வலுப்படுத்துவதோடு, அவர்களின் உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் நிலைகளில் கவனம் ஈர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதேபோல், கலந்து கொண்ட மற்ற விருந்தினர்களும் மலையகப் பெண்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உறுதுணையாக இருந்து, பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் (VOPP) அமைப்புடன் இணைந்து செயல்படுவதாகவும், இவ்விடயங்களை சமூகத்தில் முன்னிறுத்துவதாகவும் வலியுறுத்திய மையும் குறிப்பிடத்தக்கது.










No comments