JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷனின் தெளிவு ரமழான் சிறப்பு நிகழ்ச்சிக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பிக்குமாக பயனுள்ள 10 தலைப்புக்களில் 10 உலமாக்கள் மூலம் முகநூல் ஊடாக மக்களுக்கு பயன்மிக்க விளக்கங்கள் தெளிவு எனும் நேரலை நிகழ்ச்சிகள் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மற்றும் முஹைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் ஆகிய இடங்களில் இருந்து வழங்கப்பட்டது.


இவ்வாறு இட ஒதுக்கீடு செய்து தெளிவு நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மதுரஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களை கௌரவிக்கும் முகமாக ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எம் ஏ.பீ எம்  முபஸில் (உஸ்மானி) , முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம் சாதிக் மற்றும் சமூக ஊடகம் எஸ் எம் றிஸ்வி ஹூசைன் ஆகியோருக்கு கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தது.


இந் நிகழ்வு நஷ்ர் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் எம் ஏ சீ ஏ முத்தலிப் தலைமையில் நிகழ்ச்சி தொகுப்பாளரும் இணைப்பாளருமான ஏ.ஆர்.எம் அஸ்கர் செயலாளர் எம் எச் எம் சியாஜ் மற்றும் உப செயலாளர் ஏ ஆர்.எம் முஷாதிக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال