JobVibe.lk - Sri Lanka Job Portal

123 கிலோ ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய படகுடன் 5 பேரை கைது செய்த கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.


குறித்த மீன்பிடி படகில் சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் மொத்த பெறுமதி சுமார் ரூ.300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட இந்த பலநாள் மீன்பிடி படகு, திங்கட்கிழமை (16) அதிகாலை 5 சந்தேகநபர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال