JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி !

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினொல்ட் அவர்களின் தலைமையில் அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சாமர ஜயதிலக்க அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


மேலும் விசேட அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்வி அதிகாரி எஸ். சுரேஷ் மற்றும் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முத்தரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் 125ஆம் ஆண்டு விழாக்குழு உறுப்பினர்களான எஸ். நிர்மலகுமார், நிதர்ஷன் டேவிட், பசில் சகாயசாந்த், பி. வினோஜ்ரதன் மற்றும் எஸ். சிந்துஜன் ஆகியோரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்றதுடன், மாணவர்களின் ஒழுங்குமுறையுடன் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய இந்த விளையாட்டுப் போட்டி மிகவும் பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال