Breaking News

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு தோல்வியும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளும், யூதர்களின் தந்திரமும்.

ஈரானை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் அண்மையில் ஏற்பட்ட ஒன்றல்ல. அது 1979 இல் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதிலிருந்து முயற்சிக்கப்பட்டு வருகிறது. அப்போது “யுரேனியம் செறிவூட்டல், நீண்ட தூர ஏவுகணை” என்ற சொல்லாடல் இருக்கவில்லை.   


1980 இல் அமெரிக்காவின் தூண்டுதலில் ஈரானை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் ஈரான் - ஈராக் போராக எட்டு வருடங்கள் நீடித்தது. அர்த்தமில்லாத இந்த போரில் இருதரப்பிலும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.


1988 இல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையினை விதித்தது. அன்றிலிருந்து கட்டம் கட்டமாக அதிகரிக்கப்பட்டு இன்று வரைக்கும் நீடிக்கிறது. 


1989 இல் மத்திய கிழக்கில் பெரும் அமைதி நிலவியது. பாலஸ்தீனை தவிர வேறு எங்கும் சண்டைகள் இல்லை. இது யூதர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.


சதாமிடம் தோல்வியடைந்திருந்தால், இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக ஈரானில் அமெரிக்க படைகளை நிறுத்துவதுடன், ஈரானின் இயற்கை வளங்களை சுரண்டுதல் ஆகிய இரண்டு திட்டங்கள் அமெரிக்காவிடம் இருந்தது. 


ஈரானை ஆக்கிரமிக்கும் திட்டம் தொல்வியடைந்ததனால் அடுத்தகட்ட நகர்வுகளாக ஈராக் – குவைத் எல்லை பிரச்சினையை பயன்படுத்தி குவைத்தை ஆக்கிரமிப்பதற்கு சதாம் தூண்டப்பட்டார்.  


அதன் அடிப்படையில் 1990 ஆகஸ்ட் 02 இல் குவைத்தை ஈராக்கிய படைகள் ஆக்கிரமித்தது. 


குவைத் மீதான சதாமின் படையெடுப்பினால் முதலில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் யூதர்கள். ஏனெனில் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை காலூன்ற செய்வதற்கான சூழல் உருவானதுதான் இதற்கு காரணமாகும்.


குவைத்தை மீட்பதற்கு அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் கூட்டணி அமைத்து போருக்கு தயாரானார்கள். அதற்கான செலவு 60 பில்லியன் அமெரிக்க டொலராகும். இதில் 40 பில்லியனை சவூதி அரேபியா வழங்கியது.


ஈரான் – ஈராக் போரில், ஈரான் தனிமைப்படுத்தபட்டது போன்று, குவைத்தை மீட்பதில் ஈராக் ஓரம்கட்டப்பட்டதன் பின்புதான் சதாம் உண்மைகளை உணர்ந்து கொண்டார். இது யூதர்களினதும், அரபு தலைவர்களினதும் சதித் திட்டங்கள் என்பதனை உணர்ந்ததனால் சதாம் ஈரானிடம் மன்னிப்பு கோரினார்.


எட்டு வருகால யுத்தத்தில் பதட்டமாக இருந்த ஈரானிய நீண்ட எல்லைப் பிரதேசமே, குவைத்தை மீட்பதற்கான போரில் சதாமுக்கு பாதுகாப்பான பிரதேசமாக இருந்தது. ஈராக்கை சுற்றியுள்ள ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அமெரிக்காவினதும் அதன் நேச நாட்டு படைகளாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது.


அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அமெரிக்க படைகள் மத்திய கிழக்கு மண்ணை ஆக்கிரமித்துள்ளனர். 


மத்திய கிழக்கில் காலூன்றியுள்ள அமெரிக்க படைகளை வெளியேற்றும் முதல் கட்டமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்றும் நோக்கில் ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஈரானின் இந்த முயற்சி வெற்றிபெற பிராத்திப்போம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments