JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீனின் பிரதான அனுசரணையில் இடம் பெற்ற நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூனபுத்தளம் மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான ரனீஸ் பதூர்தீனின் பிரதான அனுசரணையில் இடம் பெற்ற நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.


அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


புத்தளம் இஹ்யாவும் உலூம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளரும் புத்தளம் பாரி பள்ளியின் பிரதம பேஷ் இமாமுமான அஷ்ஷெய்க் சகீனத் இஹ்யாயி அவர்கள் விஷேட ரமழான் சிந்தனையை வழங்கி வைத்தார்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال