போரிடுவதில் இஸ்லாமிய சட்டத்தையும், ஐ.நா சாசனத்தையும் பின்பற்றுகின்ற ஈரான். போர் குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது ?
அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தையோ, மனிதாபிமானத்தையோ பின்பற்றுவதில்லை.
ஈரானில் பாடசாலைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருந்தும், ஆத்திரப்பட்டு வரம்பு மீறாமல், போர் விதிமுறைகளையும், அதன் வரையறைகளையும் ஈரான் மிகவும் இறுக்கமாக பின்பற்றி வருகின்றது.
ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதனால் போர் பற்றிய சர்வதேச சட்டம் மட்டுமல்லாது இஸ்லாமிய சட்டத்தினை அது பின்பற்றுகின்றது.
இன்றைய சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப் படுவதற்கு 1400 வருடங்களுக்கு முன்பே போர் பற்றி இஸ்லாமிய சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போரை ஆரம்பிக்க இஸ்லாத்தில் அனுமதி இருந்தாலும், அது சுயபாதுகாப்பு மற்றும் அநீதியை தடுப்பதற்கு அனுமதிக்கிறது.
"“உங்களை எதிர்த்து போரிடுவோருக்கு எதிராக நீங்கள் அல்லாஹ்வின் வழியில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்."” - அல்-குர்ஆண்
போரில் பொதுமக்களை குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பிற மதகுருக்கள் ஆகியோர்களை தாக்கக்கூடாது. அத்துடன் பயிர்கள், மரங்கள், கால்நடைகளை அழிக்கக் கூடாது.
போர் கைதிகளை நன்றாக நடத்துவதுடன், கொல்லப்பட்ட உடல்களை அவமதிக்கவோ, உறுப்புக்களை வெட்டுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
“"அவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், கைதிகளுக்கும் கொடுக்கின்றனர்.”" – அல்-குர்ஆண்
மேலும் ஒப்பந்தங்களை மீறுதல், துரோகம் செய்தல், மறைமுகமாக கொலை செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டம் அவ்வாறிருக்க,
உலக அமைதிக்கு கெடுதியாக உள்ள நாட்டின்மீது போர் தொடுப்பதென்றால் ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுமதி வேண்டும். ஆனால் அவ்வாறான எந்தவித அனுமதியும் இல்லாமல் ஈரான் மீது தொடுக்கப்பட்ட போர் சட்டவிரோதமானது.
ஒரு நாடு தாக்கப்பட்டால், தாக்கப்படுகின்ற நாடு தற்காப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு Article 51 அனுமதியளிக்கின்றது. இதனைத்தான் ஈரான் சட்டரீதியாக செய்து கொண்டிருக்கின்றது.
இஸ்ரேல் உட்பட சுற்றியுள்ள அமெரிக்க நிலைகள் அனைத்தும் ஈரானின் தாக்குதல் வீச்சுக்குள் உள்ளது. ஈரான் நினைத்தால் அனைத்தையும் முற்றாக தாக்கியழிக்க முடியும்.
ஆனால் அவர்கள் எவ்வாறு தாக்குகின்றார்களோ அதற்கேற்ப பதில் வழங்குகின்றனர். ஈரானிய வங்கிகள் மீது தாக்கியதற்காக பஹ்ரேனில் உள்ள இரண்டு அமெரிக்க வங்கிகளும், ஈரானின் என்னை சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியமைக்காக இஸ்ரேலின் எண்ணை சுத்திகரிப்பு நிலையம். இதுபோன்றுதான் வரம்பு மீறாத போரினை ஈரான் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு குறித்த பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அறிவித்தவிட்டு தாக்குகின்ற ஈரானின் போரியல் நேர்மை வேறு எந்த நாட்டிடமும் இல்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments