JobVibe.lk - Sri Lanka Job Portal

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் அஹதிய்யா மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் அஹதிய்யா பாடசாலையில் இடம்பெற்ற முஸாபகத்துர் ரமழான் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) அல் மின்ஹாஜ் அஹதிய்யாவின் அதிபர் மௌலவியா ஏ.டி. பஷிலா பேஹம் தலைமையில் இடம்பெற்றது. 


பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற  கௌரவிப்பு நிகழ்வில் புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் செயலாளர் பாரூக் பதீன் ஆசிரியர், அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற ஏ. சீ. நஜிமுதீன் மற்றும் ஊரில் உள்ள ஆலீம்கள், ஆலீமாக்கள் , ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال