JobVibe.lk - Sri Lanka Job Portal

ஈரானுடனான போரில் அணு குண்டு பாவிக்கப்பட்டால், அதில் யாருக்கு அதிகம் பாதிப்பு ?

அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளுடன் ஏனைய நாடுகள் மோதுவதற்கு துணிவதில்லை. அவ்வாறிருந்தும், அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் அச்சுறுத்தலுக்கு பணியாமல், ஈரான் தனித்து நின்று துணிவுடன் போர் செய்வதென்பது ஆச்சர்யமான விடயமாகும். 


தற்போது நடைபெற்று வருகின்ற போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் அணு குண்டுகளை தவிர, தங்களிடமுள்ள அனைத்து குண்டுகளையும் ஈரான் மீது பயன்படுத்திவிட்டது.  


ஏற்கனவே ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசிய கொடூரமான அனுபவம் அமெரிக்காவுக்கும், பொது மக்களை கொலை செய்கின்ற கொடூர அனுபவம் இஸ்ரேலுக்கும் உள்ளது.  


போர் ஆரம்பமாவதற்கு முன்பு ஈரானுக்கு அணு குண்டுகளை வழங்க தயாராக உள்ளதாக வட கொரியா அறிவித்திருந்ததுடன், அணு ஆயுதங்களை  சீனா ஈரானுக்கு ரகசியமாக வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. 


இதிலிருந்து அணு ஆயுதங்களை தயாரித்துத்தான் பயன்படுத்த வேண்டுமென்றில்லை என்பது புலனாகின்றது. 


ஒரு நாட்டின்மீது பெரிய அணு குண்டு ஒன்றினை வீசினால் அதன் தாக்கம் மற்றும் கதிர் வீச்சு அடங்கலாக சுமார் 20km பரப்பில் அதன் பாதிப்புக்கள் ஏற்படும். 


இஸ்ரேல் சுமார் 22,000 km² சிறிய நிலப்பரப்பினையும், ஈரான் சுமார் 1,648,000 km² பாரிய நிலப்பரப்பினையும் கொண்ட நாடுகளாகும். 


ஈரான், இஸ்ரேல் மீது அணு குண்டினை முதலில் வீசப்போவதில்லை. ஈரான் மீது இஸ்ரேல் முதலில் வீசினால் பதில் வழங்குவதற்கு கால அவகாசம் ஈரானுக்கு இருக்கும். ஆனால் இஸ்ரேல்மீது ஈரான் அணு குண்டினை வீசினால் பதில் வழங்குவதற்கு இஸ்ரேலுக்கு அவகாசம் இருக்காது. ஏனெனில் அது முற்றாக அழிந்துவிடும். 


இஸ்ரேலின் முக்கிய பெரிய நகரங்களாக Tel Aviv, Jerusalem, Haifa, Beersheba ஆகிய நான்கு நகரங்களே உள்ளன. ஆனால் ஈரானில் ஏராளமான முக்கிய நகரங்கள் உள்ளது. 


இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்றால் ஐந்து அல்லது ஆறு குண்டுகள் போதுமானது. ஆனால் ஈரானை அழிப்பதென்றால் நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகள் தேவைப்படும். அவ்வாறிருந்தும் ஈரானை முற்றாக அழித்துவிட முடியாது. 


எனவே நடைபெற்று வருகின்ற ஈரானுடனான போரில் அணு குண்டு பாவனை இடம்பெற்றால் அதில் முற்றாக அழிவினை எதிர்கொள்வது இஸ்ரேல் என்பதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் அறியாமலில்லை. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال