JobVibe.lk - Sri Lanka Job Portal

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் இப்தார் நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

எம்.யூ.எம்.சனூன்

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மூலமாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இம்முறை கொழும்பு Marine Drive பகுதியில் அமைந்துள்ள Marine Grand Banquet Hall வளாகத்தில் (15) ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.


அமைப்பின் தவிசாளர் டாக்டர் எம்.ஏ.சி. மஹ்சூம் தலைமையிலும், தலைவர் ஏ.ஆர்.அமீர்கானின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக உலக பௌத்த சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் சுதத் தேவபுர மற்றும் தெஹிவள நகர சபையின் மேயர் பெரகும் சாந்த உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் பல மதங்களைச் சேர்ந்த மத தலைவர்கள் கலந்து கொண்டு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இது மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் அர்த்தமுள்ள சந்திப்பாக அமைந்தது.


“உலகின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் போர் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் விரைவில் முடிவுக்கு வந்து, மனிதகுலத்தில் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பதற்காக தாங்கள் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வதாக மதகுருமார்கள் தங்களது உரைகளில் குறிப்பிட்டனர்.”


இந்நிகழ்வை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர் மற்றும் ஊடகவியலாளர் ஜெஸ்மின் அவர்கள் தொகுத்து வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.


மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு சர்வதேச ரீதியில் உள்ள பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


இந்நிகழ்வை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.


இந்த நிகழ்வு மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான சந்திப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال